மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு


மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு
x

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.6000 ஆகவும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.4000-லிருந்து 8000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6000-லிருந்து ரூ.12000 ஆகவும் தொழிற்கல்வி மற்றும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு ரூ.7000-லிருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Next Story