கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்


கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
x

கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யக் கூடிய ஒன்று. தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கொப்பரை தேங்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.150-க்கும், உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

மேலும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணையை வழங்க அரசு முன்வர வேண்டும். தென்னை விவசாயிகள் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை அரசே ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் அவர்களின் பலவேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story