வழிகாட்டி பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்


வழிகாட்டி பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 12 July 2023 7:52 PM GMT (Updated: 13 July 2023 11:35 AM GMT)

வழிகாட்டி பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

தஞ்சாவூர்

ஆத்திக்கோட்டை ஊராட்சியில் வழிகாட்டி பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழிகாட்டி பெயர் பலகை

பட்டுக்கோட்டையில் இருந்து மதுக்கூர், மன்னார்குடி வழியாக கும்பகோணம் செல்பவர்களுக்காவும், கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி, மதுக்கூர் வழியாக பட்டுக்கோட்டை வருபவர்களுக்காவும், மன்னார்குடி, மதுக்கூரிலிருந்து பட்டுக்கோட்டை வந்து புதுக்கோட்டை, செங்கிப்பட்டி, மனோரா, தொண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் செல்வதற்காகவும் பல்வேறு இடங்களில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன ஓட்டிகள் தங்கள் வழி பாதைகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆத்திக்கோட்டை ஊராட்சியில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

தற்போது இந்த வழிகாட்டி பெயர் பலகை அருகில் சாலையோரத்தில் உள்ள பெரிய மரங்களின் கிளைகள் முற்றிலுமாக மறைத்துள்ளது. இதனால் நெடுஞ்சாலைத்துறை சாலையில் மதுக்கூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வரக்கூடிய வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வழிகாட்டி பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story