நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சிங்கராயன் வரவேற்றார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் அம்சராஜ் விளக்கி பேசினார்.

போராட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளுக்கான காலி பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும்.

பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்த சாலை பணியாளரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறையிலே விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் தமிழ் நன்றி கூறினார்.


Next Story