சிக்கன் ரைஸ் போட தாமதமானதால் சூறையாடப்பட்ட ஹோட்டல்.. 3 பேர் கைது


சிக்கன் ரைஸ் போட தாமதமானதால் சூறையாடப்பட்ட ஹோட்டல்.. 3 பேர் கைது
x

தஞ்சாவூர் அருகே சிக்கன் ரைஸ் போட தாமதமானதால் ஹோட்டல் சூறையாடப்பட்ட நிலையில், 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் அருகே ஹோட்டல் ஒன்றில் சிக்கன்ரைஸ் கேட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் உரிமையாளரை தாக்கிய நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரந்தை பகுதியில் சிக்கன்ரைஸ் கடை ஒன்றை நடத்தி வருபவர் சிராஜூதீன். இவரின் கடைக்கு வந்த நபர் ஒருவர் சிக்கன்ரைஸ் கேட்டு நீண்ட நேரமாகியதால் சிராஜூதீனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னுடைய நண்பர்கள் 2 பேரை அழைத்து கொண்டு வந்து கடையை சூறையாடும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story