வீட்டை அபகரித்துவிட்டு மகன் வெளியே அனுப்பி விட்டார்- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மூதாட்டி மனு


வீட்டை அபகரித்துவிட்டு மகன் வெளியே அனுப்பி விட்டார்- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மூதாட்டி மனு
x

வீட்டை அபகரித்துவிட்டு மகன் வெளியே அனுப்பி விட்டார்- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மூதாட்டி மனு

ஈரோடு

ஈரோடு திருநகர் காலனி 4-வது வீதியை சேர்ந்த திலகவதி (வயது 69) என்பவர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கண்ணீர் மல்க வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனக்கு சொந்தமான வீட்டில், எனது மூத்த மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கீழ் தளத்திலும், இளைய மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் தளத்திலும் தங்கி இருந்தனர். நான் வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்து வருகிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்ட என்னை கவனிக்காததால் கடந்த 2021-ம் ஆண்டு இரு மகன்களையும் வீட்டை காலி செய்யுமாறு கூறிவிட்டேன். நான் மேல் தளத்தை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை கொண்டு எனது மீதி நாட்களை கழித்துக் கொள்கிறேன் என மகன்களிடம் கூறினேன். அதனை ஏற்று எனது மூத்த மகன் வீட்டை காலி செய்து சென்று விட்டான். ஆனால் இளைய மகன் காலி செய்யாமல் மனைவியுடன் சேர்ந்து அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நான் வீட்டை பூட்டிவிட்டு மூத்த மகன் வீட்டுக்கு சென்றேன். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது எனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு புது பூட்டு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மகனிடம் கேட்டபோது அவர் என்னை கடுமையாக திட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டார். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு வீட்டை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Related Tags :
Next Story