சகோதரர்களின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன


சகோதரர்களின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன
x

சகோதரர்களின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

பெரம்பலூர்

குரும்பலூர் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சோந்தவர் மாசி பெரியண்ணன் (வயது 48). இவரும், இவரது தம்பி ராஜாவும்(44) அருகருகே இருந்த குடிசை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் மாசி பெரியண்ணனின் மகள் மிதுனா(11) மட்டும் வீட்டில் இருந்தபோது திடீரென்று குடிசை வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட மிதுனா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். மேலும் அப்போது லேசான மழை பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடுகளில் எரிந்த தீயை அக்கம், பக்கத்தினர் அணைத்து விட்டனர். இதில் 2 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீப்பற்றியதை உடனடியாக கவனித்ததால் சிறுமி மிதுனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story