மனித செஸ் போட்டி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் மனித செஸ் போட்டி கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு மனித செஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அவருடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளைக்கோல் பயிற்றுனர் ஆனஸ்ட்ராஜ், கல்லூரி நிறுவனர்கள் துரைவேலு, சேகர், கல்லூரி முதல்வர் அமுதாயி மற்றும் பேராசிரியர்கள்,
கல்லூரி மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story