மாரண்டஅள்ளியில்2 குழந்தைகளின் தாய் கடத்தலா?; கணவர் போலீசில் புகார்


மாரண்டஅள்ளியில்2 குழந்தைகளின் தாய் கடத்தலா?; கணவர் போலீசில் புகார்
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 3:13 PM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளியில்2 குழந்தைகளின் தாய் கடத்தலா?; கணவர் போலீசில் புகார்

தர்மபுரி

மாரண்டஅள்ளி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நேரு நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது42). பூச்செடி வியாபாரி. இவரது மனைவி கலைவாணி (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கலைவாணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற அவர் திடீரென மாயமானார். அவருடைய செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து மஞ்சுநாதன் மாமனார் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார்.

அப்போது கலைவாணி இங்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர், மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுநாதன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். அதில் சுரேஷ் (42) என்பவர் தனது மனைவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story