மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு வலைவீச்சு
கடையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே கானாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீர் செல்வம். செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த மணிமேகலா (30) என்பவருக்கும் திருமணம் முடிந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மணிமேகலா தனது தாய் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் மணிமேகலா நேற்று முன்தினம் இரவு கடையத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ பண்டிகைக்கு தனது மகன்களுடன் கடையம் வந்தார். யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஆசீர் செல்வம், மணிமேகலா பின் முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிமேகலா கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து ஆசீர் செல்வத்தை தேடி வருகிறார்.