விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
திருவட்டார்:
திருவட்டார் அருகே செந்தறவிளை, ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஜாண்சாலமோன் (வயது 35). இவர் சம்பவத்தன்று ஆற்றூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மனைவி ரியா பால், மகள் ஜூடிட் எல்சா (5) ஆகியோருடன் வேர்கிளம்பி நோக்கி சென்றுகொண்டு இருந்தார். பூவன்கோடு அருகே செல்லும்போது அருவிக்கரை பகுதியைச் சேர்ந்த விஜய் (25) தனது மோட்டார் சைக்கிளில் ஆற்றூர் நோக்கி வந்துக்கொண்டு இருந்தார். இரு ேமாட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.
இதில் ஜாண்சாலமோன், ரியா பால், ஜூடிட் எல்சா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விஜய்க்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை விஜய் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்த விஜய் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக அரசு போக்குவரத்துக் கழக திருவட்டார் கிளை பணிமனையில் வேலை பழகுனராக (அப்ரன்டீஸ்) பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.