விபத்தில் காயமடைந்தவர் சாவு
மானூர் அருகே விபத்தில் காயமடைந்தவர் இறந்தார்.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் காசிப்பாண்டி (வயது 41). கால் ஊனமுற்றவர். இவர் கடந்த மாதம் 18-ந் தேதி தனது உறவினர்கள் இருவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் நெல்லை கோர்ட்டுக்கு ஒரு வழக்கு விஷயமாக சென்றுள்ளார். இவர்கள் ராமையன்பட்டி - வேப்பங்குளம் விலக்கு பகுதியில் சென்றபோது, எதிரே தூத்துக்குடி மாவட்டம் மடத்தூரை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் ஓட்டி வந்த லாரி மீது எதிர்பாராமல் மோதினர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு காசிப்பாண்டி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இறந்த காசிப்பாண்டிக்கு பிச்சம்மாள் (32) என்ற மனைவியும், ஒரு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
Related Tags :
Next Story