விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் இறந்தார்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா குருமலை பஞ்சாயத்து சுந்தரேசபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தனசேகரன் என்பவருடைய மகன் விக்னேஷ் (வயது 30). இவர் காற்றாலையில் வேலை பார்த்து வந்தார். விக்னேசின் தாயார் கடந்த 16 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையொட்டி ஆற்றில் திதி கொடுப்பதற்காக விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 15-ந் தேதி சுந்தரேசபுரத்தில் இருந்து கயத்தாறு நோக்கி வந்து கொண்டிருந்தார். இரட்டைகுளம் அருகே வரும்போது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் விக்னேஷ் காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விக்னேஷ் இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story