கும்கி யானைகள் டாப்சிலிப் முகாமுக்கு திரும்பின


கும்கி யானைகள் டாப்சிலிப் முகாமுக்கு திரும்பின
x
தினத்தந்தி 29 July 2023 1:15 AM IST (Updated: 29 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மக்னா யானையை பிடிக்க சென்ற கும்கி யானைகள் டாப்சிலிப் முகாமுக்கு திரும்பின.

கோயம்புத்தூர்

மக்னா யானையை பிடிக்க சென்ற கும்கி யானைகள் டாப்சிலிப் முகாமுக்கு திரும்பின.

மக்னா யானை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. அந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் அருகே வரகளியாறு வனப்பகுதி யில் விடப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த யானை கடந்த 22-ந் தேதி வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்தது.

இதையடுத்து கோவை பேரூர் தேவிசிறை அணைக்கட்டு பகுதி யில் நின்ற அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையி னர் பிடித்தனர்.

இதையடுத்து அந்த யானை வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்தில் விடப்பட்டது.

பயிர்களை சேதப்படுத்தியது

அங்கிருந்து டாப்சிலிப் வழியாக ஆனைமலை அருகே சரளப்பதி பகுதிக்கு மக்னா யானை வந்தது. கடந்த 4 மாதங்களாக அந்த யானை அங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விளை பொருட்க ளை சேதப்படுத்தி வருகிறது.

எனவே மக்னா யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கால்நடை மருத்துவ குழுவினர் யானையை தொடந்து கண்காணித்து வருகின்றனர்.

கும்கிகள் திரும்பின

இந்த நிலையில் மக்னா யானை பிடிக்கும் பணிக்கு டாப்சிலிப் பில் இருந்து சின்னதம்பி, கபில்தேவ், ராஜவர்தன் ஆகிய கும்கி யானைகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் அந்த யானைகள் நேற்று மீண்டும் டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையில் சின்னதம்பி யானைக்கு மதம் பிடித்ததால் மக்க ளின் பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சரளப்பதி பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் மக்னா யானையை பிடிக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

அந்த மக்னா யானையை எங்கு வைத்து பிடிப்பது, அதன் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நடமாட்டம் கண்காணிப்பு

இதற்கிடையே சரளப்பதியில் இருந்து சேத்துமடை வனத்துறை சோதனை பகுதியில் மக்னா யானை சுற்றி திரிந்து வருகிறது. இரவு 8 மணிக்கு வனத்தை விட்டு வெளியே வரும் யானை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையை பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது திருப்பி அனுப்பப்பட்ட கும்கி யானைகளுக்கு பதிலாக, வேறு 2 கும்கி யானைகள் வரவழைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story