தேவகோட்டை வாரச்சந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்


தேவகோட்டை வாரச்சந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Aug 2023 7:00 PM GMT (Updated: 13 Aug 2023 7:01 PM GMT)

தேவகோட்டை வாரச்சந்தையில் தொழிலாளர் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை

சிவகங்கை, ஆக.14-

தேவகோட்டை வாரச்சந்தையில் தொழிலாளர் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிரடி ஆய்வு

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆகியோரின் ஆணையின்படி, மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் மதுரை தொழிலாளர் துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், சிவகங்ைக தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி, தொழிலாளர் துறை பணியாளர்கள், தேவகோட்டை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேவகோட்டை வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

ரூ.5 ஆயிரம் அபராதம்

இந்த சோதனையில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள் 22, மேஜை தராசு 4, விட்டத்தராசு 12, இரும்பு எடைகற்கள் 30, உற்றல் அளவைகள் 1 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவு 2 ஆக மொத்தம் 71 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் ஆண்டுக்கு ஒருமுறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறையும் முத்திரையிட்டு அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், பொட்டல பொருட்களின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த தகவலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தெரிவித்தார்.


Next Story