பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்


பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

புகாரை விசாரிக்காமல் என்ஜினீயரை சிறையில் அடைத்த பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர்

புகாரை விசாரிக்காமல் என்ஜினீயரை சிறையில் அடைத்த பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

என்ஜினீயர்

கோவை மாவட்டம் சிறுமுகை எஸ்.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). என்ஜினீயர். இவர் முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. விஜயகுமார் 5 நாள் சிறையில் இருந்தார்.

இந்த நிலையில் சாதாரண குடும்ப தகராறை, சரியாக விசாரிக்காமல் வரதட்சணை கொடுமை என்று தவறாக வழக்கு பதிவு செய்து தன்னை சிறையில் அடைத்து மனஉளைச்சலை ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிம கமிஷனில் தாக்கல் செய்த மனுவில் விஜயகுமார் குறிப்பிட்டு இருந்தார்.

ரூ.1 லட்சம் இழப்பீடு

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை கமிஷன், இன்ஸ் பெக்டர் மீனாம்பிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தர விட்டது. அந்த தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.

மாநில அரசு இந்த தொகையை விஜயகுமாருக்கு இழப்பீடாக கொடுத்துவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் தொகையை பிடித்தம் செய்து கொள்ளமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.AMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

1 More update

Next Story