ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை:டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி

ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை:டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
x

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை எதிரொலியாக, டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம்

ஓமலூர்

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை எதிரொலியாக, டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேனிஷ்பேட்டை ஏரி

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வரும் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டேனிஷ்பேட்டை அடிவாரம் ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வரும் மேற்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் டேனிஷ்பேட்டை ஏரி மற்றும் காடையாம்பட்டி கோட்டேரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது.

நிரம்பியது

இந்த நிலையில் டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பி உபரிநீர் கோட்டேரிக்கு செல்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே டேனிஷ்பேட்டை மற்றும் கோட்டேரி நிரம்பிய நிலையில் இந்த ஆண்டு 3 மாதங்கள் தாமதமாக டேனிஷ்பேட்டை ஏரி தற்போது நிரம்பி உள்ளது.

இருப்பினும் விவசாயிகள் விவசாய பணிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகின்றனர். காடையாம்பட்டி கோட்டேரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

Next Story