விடுதியில் வக்கீல் மர்ம சாவு


விடுதியில் வக்கீல் மர்ம சாவு
x

விடுதியில் வக்கீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருச்சி

சமயபுரம்:

கோவிலுக்கு வந்தார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மணக்கால் கீழத்தெருவை சேர்ந்தவர் பிரகலநாதன் (வயது 38). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவர் சமயபுரம் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக விடுதி உரிமையாளரிடம் கூறிவிட்டு, ஒரு அறைக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இறந்து கிடந்தார்

சுமார் அரை மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர், இது குறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் சென்று பார்த்தபோது, அறை அருகே பிரகலநாதன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் பிரகலநாதன் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வக்கீல்கள் திரண்டனர்

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏராளமான வக்கீல்கள், போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த பிரகலநாதனுக்கு சங்கீதா என்ற மனைவியும், மகிழ்வதனி என்ற பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story