வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை


வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். .இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரிஷிவந்தியம் தொகுதி செயலாளர் சிலம்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தலிச்சந்திரன், சிந்தனைவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி சக்திவேல் வரவேற்றார். இதில் பழையனூர் கிராமத்தில் குளத்து புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு பணிகள் சரியாக நடைபெற வில்லை. இதனால் சிலரது ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பாஸ்கர், கோவிந்தராஜ், கார்த்தி, கண்ணன், சக்திவேல், ஜோதி, மொட்டை, வனிதா, அம்பிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த வந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ், சப்- இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ராஜா, ஜெயமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story