பேரூராட்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை


பேரூராட்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
x

பேரூராட்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே வடகரை பேரூராட்சி வாவாநகரம் பகுதியில் நேற்று காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்த நிலையில் அந்த கொடிக்கம்பமானது அருகில் உள்ள இடத்துக்கு செல்வதற்கு இடையூறாக இருப்பதாக கூறி, அந்த இடத்தின் உரிமையாளர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த கொடிக்கம்பத்தை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி, பேரூராட்சி அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமையில் வடகரை பேரூராட்சி அலுவலத்ைத முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அச்சன்புதூர் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story