மின்னல் தாக்கியதில் மரங்கள் தீப்பற்றி எரிந்தன


மின்னல் தாக்கியதில் மரங்கள் தீப்பற்றி எரிந்தன
x

மின்னல் தாக்கியதில் மரங்கள் தீப்பற்றி எரிந்தன.

திருச்சி

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள டி.இடையப்பட்டி கிராமத்தில் நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மரங்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் தீப்பற்றி எரிய தொடங்கின. இது பற்றி அக்கம் பக்கத்தினர் மருங்காபுரி வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கிய நிலையில் தீ அணைய தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story