தம்பதியை தாக்கியவர் கைது


தம்பதியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 1:15 AM IST (Updated: 4 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் தம்பதியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிச்செல்வி (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன்-சரவணப்பிரியா தம்பதியினர் சீட்டு பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முத்துக்கருப்பன் பணம் தர மறுத்ததால், பழனிச்செல்வி வடமதுரை போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்கருப்பனின் உறவினரான பாலமுருகன் (34) என்பவர் பழனிச்செல்வி மற்றும் அவரது கணவர் வேல்முருகனை தகாத வார்த்தையால் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பழனிச்செல்வி வடமதுரை போலீசில் மீண்டும் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.


Next Story