தம்பதியை தாக்கியவர் கைது


தம்பதியை தாக்கியவர் கைது
x

தம்பதியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா(வயது 36), அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன்(63). இவர்களுக்கு இடையே இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் சம்பவத்தன்று வெண்ணிலா மற்றும் இவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் குச்சிகளை நடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அங்கு வந்த அன்பழகன் குச்சிகளை நடக்கூடாது என்று கூறியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அன்பழகன் கோபத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வெண்ணிலா ஆகிய இருவரையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் வெண்ணிலா அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story