விவசாயியை தாக்கியவர் கைது
விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 61) விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மகன் கவியரசனுடன் கொத்தட்டையை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மயானத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த திருச்செங்கு மகன் திருவிநாயகமூர்த்தி (20), திருமூர்த்தி, அஜித் ஆகியோர் சேர்ந்து கலியபெருமாளின் தம்பி நடராஜனை தாக்கியுள்ளனர். இதை தடுக்க சென்ற கலியபெருமாளை அவர்கள் கற்களால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமூர்த்தி உள்பட 3 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவிநாயகமூர்த்தியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story