தனியார் நிறுவன மேலாளரை தாக்கியவர் கைது


தனியார் நிறுவன மேலாளரை தாக்கியவர் கைது
x

தனியார் நிறுவன மேலாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே அணைத்தலையூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). தனியார் கியாஸ் சிலிண்டர் கம்பெனியில் மேலாளரான. இவர் பண்டாரகுளம் பேச்சிநகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருடைய ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் போட்டதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது பிரவீன்குமார் மற்றும் சிலர் சேர்ந்து முருகேசனை கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.


Next Story