முதியவரை தாக்கியவர் கைது


முதியவரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2023 2:00 AM IST (Updated: 11 Aug 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

முதியவரை தாக்கியவர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டணத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(வயது 52). இவர் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அவர் தோட்டத்திற்கு அருகில் நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் இங்கு ஏன் நிற்கிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெகதீஸ்வரனை அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெகதீஸ்வரனை தாக்கியது கோட்டூரை சேர்ந்த சிவானந்தம் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story