கறிவெட்டும் கத்தியால் வாலிபரை வெட்டியவர் கைது


கறிவெட்டும் கத்தியால் வாலிபரை வெட்டியவர் கைது
x

கறிவெட்டும் கத்தியால் வாலிபரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கரைவெட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் வேல்முருகனுக்கும் (35) இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சிவன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ராமசாமியை வேல்முருகன் தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமசாமி வெங்கனூர் போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், ராமசாமியை தாக்கி அவர் வைத்திருந்த கறி வெட்டும் கத்தியால் மார்பு, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அருகே இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story