பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது


பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள கே.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 47)தொழிலாளி. இவருடைய உறவினரான காணை தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன்(43). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சங்கரின் அக்காளான வைத்தியநாதன் மனைவி அருள்(50) என்பவரிடம் விஜயரங்கனின் மனைவி கலைவாணி பூ வாங்கி கொடுத்து எங்கள் வீட்டில் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அருள், விஜயரங்கனிடம் பூ கொடுத்தபோது அவர், என்னை ஏன் முறைத்து பார்க்கிறாய், அடிக்கடி திட்டுகிறாய் எனக்கேட்டு கத்தியால் அருளின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அருள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சங்கர், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயரங்கனை கைது செய்தனர்.


Next Story