நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் எரித்துக்கொலை?


நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் எரித்துக்கொலை?
x

சுல்தான்பேட்டை அருகே நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருகி கிடந்தார்

சுல்தான்பேட்டை அருகே நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் செல்லிமுத்து (வயது 53). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த 9 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகள்களை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே செல்லிமுத்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் பரமேஸ்வரி என்பவரது தோட்டத்தில், செல்லிமுத்துவின் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் செல்லிமுத்துவின் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், செல்லிமுத்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.

பிரேத பரிசோதனை முடிவில் அதன் விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் எரித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story