பெண்ணின் வீட்டை சூறையாடியவர் கைது


பெண்ணின் வீட்டை சூறையாடியவர் கைது
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே பெண்ணின் வீட்டை சூறையாடியவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூரை சேர்ந்தவர் ஜெகன் மனைவி தனலட்சுமி (வயது 48). இவரது மகள் அம்மு என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி (33) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் சின்னதம்பி சம்பவத்தன்று தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த டி.வி., பீரோ, அடுப்பு உள்ளிட்ட பொருட்களை உடைத்து சூறையாடியதாக தெரிகிறது. மேலும் தனலட்சுமியை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story