பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கல்லூர் உசிலம்பட்டியை சேர்ந்தவர் அமிர்தம் (வயது 46). இவர் பள்ளத்தூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மொபெடில் வந்து கொண்டிருந்தார். பள்ளத்தூர் அருகே வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அமிர்தத்தை மொபெட்டோடு கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து அறந்தாங்கியை சேர்ந்த கரந்தமலை (38) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story