விவசாயியை கத்தியால் குத்தியவர் கைது


விவசாயியை கத்தியால் குத்தியவர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள பூதமங்கலம் அக்கரை புதுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). விவசாயி. இவருக்கு சொந்தமான பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில், பூதமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த ரமேஷ் (45) என்பவரது மாடு மற்றும் ஆடுகள் அடிக்கடி மேய்ந்து பருத்தி செடிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ரமேசின் மாடு, சரவணனின் பருத்தி வயலில் மேய்ந்துள்ளது. இதை அறிந்த சரவணன் அங்கு சென்று வயலில் மேய்ந்த மாட்டைப்பிடித்து கட்டி வைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற ரமேஷ் எப்படி என் மாட்டை பிடித்து கட்டி வைக்கலாம் என்று கேட்டு சரவணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், சரவணனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சரவணனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story