தம்பி வீட்டில் நகை திருடிய அண்ணன் கைது
தம்பி வீட்டில் நகை திருடிய அண்ணன் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை
காரைக்குடி
சாக்கோட்டை போலீஸ் சரகம் வீரசேகரபுரத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 36) கணவரை இழந்த இவர் சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று முத்துலட்சுமி வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2½ பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சாக்கோட்டை போலீசார் முத்துலட்சுமியின் அன்றாட நடவடிக்கைகள் நன்கு அறிந்தவரே இந்த திருட்டை செய்து இருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முத்துலட்சுமியின் கணவரின் அண்ணன் சந்திரன் (வயது 47) நகையை திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.
Related Tags :
Next Story