நோயாளியின் செல்போனை திருடியவர் கைது
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கச்சு மீராசா (வயது 75). இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மருமகள் துணையாக இருந்து வந்த நிலையில் நேற்று காலை அவரது செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு கடைக்கு சென்று உள்ளார். அந்த சமயம் பார்த்து மர்ம நபர் ஒருவர் அந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு செல்ல முயன்றார். இதனை கண்ட பக்கத்து நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரணை செய்ததில் மேற்கண்ட நபர் துரத்தியேந்தல் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (38) என்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story