திருவெண்ணெய்நல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திரிசூலத்தை கைது


திருவெண்ணெய்நல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திரிசூலத்தை கைது
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திரிசூலத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாதம்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

திறந்தவெளியில் அமைந்துள்ள இக்கோவிலில் இருந்த 12 கிலோ எடையுள்ள பித்தளை திரிசூலத்தை நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்மநபர் ஒருவர் திருடிச்சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மடிக்கி பிடித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சித்திலிங்கமடம் இருளர் குடியிருப்புச்சேர்ந்த குப்பன் மகன் குமரேசன் (வயது 38) என்பது தெரிந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகி கேசவன் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story