பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல்  விடுத்தவர் கைது
x

வடக்கு விஜயநாராயணம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள தினையூரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா மனைவி ராஜம்மாள் (வயது 65). வடக்கு விஜயநாராயணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைக்கண் மகன் முத்துப்பாண்டி (வயது 29). ராஜம்மாள், முத்துப்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் தினையூரணியில் அருகருகே உள்ளது. எல்கை பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி முத்துப்பாண்டி, ராஜம்மாள் வீட்டுக்கு சென்று அவரை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜம்மாள் வடக்கு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி முத்துப்பாண்டியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story