கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது


கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது
x

ராமநத்தம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே ஆ.பாளையம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் ஆ.பாளையம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் (வயது 26) என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கையும், களவுமாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story