மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
கறம்பக்குடி ஒன்றியத்தில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும். வீடு கட்டி முடித்தவர்களுக்கு தவணை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story