விஷம் குடித்து வியாபாரி தற்கொலை


விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்

பண்ருட்டி

பண்ருட்டி அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 55). கடந்த 5 வருடமாக 3 சக்கர வாகனத்தில் தெருத்தெருவாக சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர் பண்ருட்டி-சென்னை சாலையில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வரும் ஜெயபால் என்பவரிடம் காய்கறி வாங்கியதில் ரூ.2,500 பாக்கி தரவேண்டியது இருந்தது. ஆனால் பாக்கி பணத்தை தராமல் தேவேந்திரன் வேறு ஒரு கடையில் காய்கறிகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் சம்பவத்தன்று தேவேந்திரனிடம் பணம் கேட்டு அவரை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவமானம் அடைந்த தேவேந்திரன் 3 சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு திடீரென மாயமானார். அவரை காணாமல் குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் பண்ருட்டியை அடுத்த பூங்குணம் அருகே விஷம் குடித்த நிலையில் தேவேந்திரன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேவேந்திரனின் சாவுக்கு காய்கறி வியாபாரி ஜெயபால் தான் காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.


Next Story