தீப்பற்றிய ஆடையுடன் பேக்கரிக்கு சென்ற வியாபாரி


தீப்பற்றிய ஆடையுடன் பேக்கரிக்கு சென்ற வியாபாரி
x

மதுபோதையில் இருந்ததால் தெரியவில்லை:தீப்பற்றிய ஆடையுடன் பேக்கரிக்கு சென்ற வியாபாரி

திருப்பூர்

பல்லடம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் ரகுமான் (வயது50). பல்லடத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று மது போதையில் பல்லடம் கடைவீதியில் இருந்த பேக்கரிக்கு சென்றுள்ளார். பேக்கரிமுன்பு நின்றபடி சிகரெட் பற்ற வைத்த போது ரகுமானின் வேட்டியில் தீப்பிடித்து உள்ளது. அவர் போதையில் இருந்ததால் ஆடையில் பற்றிய தீ அவருக்கு தெரியவில்லை. இதையடுத்து ஆடையில் தீப்பற்றியபடி பேக்கரிக்குள் புகுந்தார். அப்போது பேக்கரியில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் ரகுமானின் ஆடையில் பற்றி இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story