தாமதமாக வந்த மாணவர்கள்: பள்ளிக்கு வெளியில் நின்றவர்களை உள்ளே அழைத்து சென்ற அமைச்சர்


தாமதமாக வந்த மாணவர்கள்: பள்ளிக்கு வெளியில் நின்றவர்களை உள்ளே அழைத்து சென்ற அமைச்சர்
x

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.

ஆலந்தூர்:

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நிற்கவைத்து இருப்பதை கண்டார். மாணவர்களிடம் இவ்வளவு தாமதமாக வரலாமா, தற்போது நேரம் என்ன ஆகிறது, எவ்வளவு தொலைவில் இருந்து வருகிறீர்கள் என்று அமைச்சர் விசாரித்தார்.

பின்னர் உடனே மாணவர்களை அழைத்து கொண்டு பள்ளிக்குள் சென்ற அமைச்சர், தாமதமாக வரும் மாணவர்களை பள்ளிக்கு வெளியே நிற்க வைக்க கூடாது. பள்ளிக்குள் அழைத்து நிற்க வையுங்கள் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்ற அமைச்சர் மாணவர்களுக்கு வருகை பதிவு எடுத்தார். மழலையர் வகுப்புகள் எப்படி செயல்படுகிறது என ஆய்வு செய்தார். பின்னர் சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துணி பைகளை வழங்கினார்.

1 More update

Next Story