அதிசய வாழை மரம்
அதிசய வாழை மரத்தை கிராம மக்கள் ஆச்சாியத்துடன் பாா்த்து செல்கிறாா்கள்.
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்:
வழக்கமாக மரத்தின் உச்சியில் தான் வாழைமரம் தார்போடும். ஒரு சில மரங்கள், மரத்தின் நடுவில் தார்போடும். ஆனால் வாழை மரத்தை முழுமையாக வெட்டியபிறகும் தார் போட்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா...?. ஆம், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பல்லரிப்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரது நிலத்தில் வெட்டிய மரத்தில் இருந்து வாழைத்தார் போட்டுள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி, வாழைமரத்தின் அடிப்பகுதியை வெட்டியுள்ளார். அடுத்த ஒரு வாரத்துக்கு பிறகு அந்த வாழைமரம் பூ பூத்தது. பின்னர், தார் போட்டுள்ளது. இந்த அதிசய வாழையை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
Related Tags :
Next Story