வாழைகளை சேதப்படுத்திய மர்மவிலங்கு


வாழைகளை சேதப்படுத்திய மர்மவிலங்கு
x

வாழைகளை மர்ம விலங்கு சேதப்படுத்தியது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் மருதகுளம் அருகே உள்ள புதுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 65). விவசாயியான இவரது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு மர்ம விலங்கு ஒன்று தோட்டத்தில் புகுந்து 20 வாழைகளை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. காலையில் தோட்டத்துக்கு வந்த சுடலைமுத்து வாழைகள் சேதம் அடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வனத்துறையினர் மர்ம விலங்கை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story