கடலூரில் அமைய உள்ள புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகிலேயே அமைக்க வேண்டும்


கடலூரில் அமைய உள்ள புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகிலேயே அமைக்க வேண்டும்
x

கடலூரில் அமைய உள்ள புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகிலேயே அமைக்க வேண்டும் என கூடுதல் கலெக்டரிடம் பொதுநல அமைப்பினர் மனு கொடுத்துள்ளனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, இணை ஒருங்கிணைப் பாளர்கள் சுப்புராயன், குருராமலிங்கம், சிவாஜிகணேசன், மன்சூர், சட்ட ஆலோசகர் திருமார்பன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங்கை சந்தித்து மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த அ.தி.மு.க. அரசு புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கீடு செய்தது. இந்த இடம் பொதுமக்கள் அனைவருக்கும் உகந்த இடமாகவும், போக்குவரத்துக்கு சவுகரியமான இடமாகவும் கருதப்படுகிறது. இந்த இடம் புதுச்சேரி, சென்னை, பண்ருட்டி, விழுப்புரம் திருக்கோவிலூர் மார்க்கமாக பிரதான சாலைக்கும், கஸ்டம்ஸ் சாலைக்கும், விழுப்புரம்- நாகை புறவழிச்சாலைக்கும் இணைப்பு சாலைக்கும் பொருத்தமாக இருக்கும். எம்.புதூருக்கு மாற்றினால் பொருத்தமற்ற இடமாக இருக்கும். ஆகவே புதிய கலெக்டர் அலுவலகம் அருகிலேயே புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story