புதிய வரி விதிப்பில் குளறுபடி இருப்பதால் மறுசீராய்வு செய்ய வேண்டும்


புதிய வரி விதிப்பில் குளறுபடி இருப்பதால் மறுசீராய்வு செய்ய வேண்டும்
x

புதிய வரிவிதிப்பில் குளறுபடி இருப்பதால் மறு சீராய்ருசெய்ய வேண்டும் என்று சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

புதிய வரிவிதிப்பில் குளறுபடி இருப்பதால் மறு சீராய்ருசெய்ய வேண்டும் என்று சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

சோளிங்கர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்துபேசினர்.

அதன்விவரம் வருமாறு:-

மறு சீராய்வு

கோபால்: நகராட்சியில் அலுவலக பணியாளர்கள் இல்லாததால் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட மலைப்புறம்போக்கு இடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். புதிய வரி விதிப்பில் குளறுபடி இருப்பதால் வரி மறு சீராய்வு செய்ய வேண்டும். வாரச்ந்தை, தினசரி சந்தை, பஸ் நிலைய கடைகளுக்கான வரி பட்டியல் குறித்து விளம்பர பலகை வைக்க வேண்டும். பஸ் நிலையம் அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.

சிவானந்தம்: பஜார் தெருவில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டிற்கு சோளிங்கர், சுற்றுப்பகுதியில் இருந்து பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். மார்க்கெட் தெரு, பஜார் தெரு முழுவதும் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளதால் நெரிசலில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கழிவுநீர்

கணேசன்: நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் முழுவதும் எசையனூர் அருகே உள்ள தடுப்பணையில் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரால் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டு உள்ளது. எனவே தடுப்பணையில் உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும். பொன்னை ஆற்று குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. மீண்டும் பொன்னை ஆற்றுக் குடிநீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

அதற்கு ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்றப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.


Next Story