2 மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று சக்கர நாற்காலி வழங்கிய அதிகாரி


2 மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று சக்கர நாற்காலி வழங்கிய அதிகாரி
x

2 மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று சக்கர நாற்காலி வழங்கிய அதிகாரி

தஞ்சாவூர்

கலெக்டரின் உடனடி நடவடிக்கையால் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த 2 மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு நேரில் சென்று அதிகாரி சக்கர நாற்காலி வழங்கினார்.

கோரிக்கை

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள உப்பு விடுதி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரகதீஸ்வரன் (வயது29). இவர் தாய் தந்தை மற்றும் சகோதரனை இழந்த நிலையில் 2 கால்களும் நடக்க முடியாத ஊனமுற்ற நிலையில், உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். இவர் தனக்கு சக்கர நாற்காலி வழங்கினால் உதவியாக இருக்கும் என தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல் பொக்கன்விடுதி தெற்கு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெகதீஸ்வரன் தனக்கும் சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த 2 பேரின் கோரிக்கைகளை ஏற்ற தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களுக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்க உத்தரவிட்டார்.

வீட்டிற்கே சென்று வழங்கிய அதிகாரி

இதையடுத்து தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று சக்கர நாற்காலிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன் (திருச்சிற்றம்பலம்), சுதாசினி சுப்பையன் (மடத்திக்காடு), நெற்கதிர் மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் சுதாகர், ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், பேராவூரணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன், செயலாளர் ராஜேஷ் கண்ணன், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் அஸ்ரப், மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி மற்றும் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story