மூதாட்டி மர்ம சாவு
பாளையங்கோட்டையில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளையங்கோட்டையில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூதாட்டி
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் சிவசுப்பு. இவருடைய மனைவி அரசம்மாள் (வயது 70). இவர்களுடைய மகன் அண்ணாமலை. டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சிவசுப்பு இறந்த பிறகு, அரசம்மாள் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை அவரது வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு கீழ் பகுதியில் இருந்து கரும் புகை வெளியேறியது.
பிணமாக கிடந்தார்
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அப்போது அங்கு அரசம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சென்று, அரசம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக அரசம்மாளுக்கும், அவரது மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
எனவே இதன் காரணமாக அரசம்மாள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.