பாதயாத்திரையை பார்க்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பாதயாத்திரையை பார்க்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரி
புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் ஆலயத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கினார். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சாலையோரம் திரண்டிருந்தனர்.
அப்போது குளச்சலை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த மூதாட்டி திடீரென மயங்கி சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அந்த மூதாட்டியை கைத்தாங்கலாக தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story