கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x

பனப்பாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.

ராணிப்பேட்டை

பனப்பாக்கம் அருகே ஜாகீர்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 80). இவர் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர் ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதையடுத்து ஜாகீர்தண்டலம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு அரக்கோணம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய நடராஜனின் உடலை பிணமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story