கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:11+05:30)

துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

விழுப்புரம்

திண்டிவனம்

மரக்காணம் அருகே உள்ள பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றின் கரையில் துணி துவைப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிமாக தவறி உள்ளே விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பிரம்மதேசம் போலீசாரும், மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி முதியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 2 ராட்சத மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியே இறைத்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதியவர் கிணற்றில் தவறி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story